நெதர்லாந்தில் துப்பாக்கிச் சூடு..ஒருவர் பலி: இரண்டு பேர் படுகாயம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

நெதர்லாந்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியிருப்பதாகவும், பலர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெதர்லாந்தின் Grote Wittenburgerstraat பகுதியில் திடீரென்று மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்த பட்சம் ஒருவர் பலியாகியிருக்கலாம் எனவும் இரண்டு பேர் காயமடைந்திருப்பதாகவும் முதல் கட்டத் தகவலில் வெளியாகியுள்ளன.

சம்பவத்தை அறிந்த பொலிசார் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அங்கு விரைந்துள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் குறித்து தெரியவில்லை எனவும், இறந்தவர்கள் மற்றும் காயமடந்தவர்கள் குறித்தும் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்