தென் கொரிய மருத்துவமனையில் தீவிபத்து: 39 நோயாளிகள் பலியான சோகம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

தென்கொரியாவின் தென்கிழக்கு பகுதியிலுள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுளளது.

மிர்யங் என்ற பகுதியில் உள்ள சேஜாங் மருத்துவமனையின் அவரச சிகிச்சை பிரிவில் தீப்பற்ற தொடங்கி பின்னர் மற்ற இடங்களுக்கும் பரவ தொடங்கியதாக தெரிகிறது.

விபத்து ஏற்பட்ட சமயத்தில் 100-கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனை கட்டிடத்திற்குள்ளும் அருகிலுள்ள மற்றொரு மருத்துவமனையிலும் இருந்துள்ளனர்.

இதில் 39 பலியானதாகவும், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதில் 11 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

93 நோயாளிகள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லபட்டுள்ளனர்.

இறந்த நோயாளிகளில் சிலர் சேஜாங் மருத்துவமனை மற்றும் அருகிலிருந்த இன்னொரு மருத்துவமனையிலிருந்து மீட்கப்பட்டு வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் குறித்து இன்னும் வெளியாகவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...