ஆயிரக்கணக்கான தெரு நாய்களை கொன்று குவித்த ரஷ்யா: அதிர்ச்சி காரணம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
419Shares

ரஷ்யாவில் முக்கிய நகரங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களை ரஷ்ய அரசு சிறப்பு படையினரை கொண்டு கொன்று குவித்து வருவது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் கால்பந்து உலக கிண்ணம் நடைபெறுவதன் பொருட்டு பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நடவடிக்கையை மேற்கொள்ள சுமார் 1.4 மில்லியன் பவுண்ட்ஸ் தொகையை அரசு ஒதுக்கியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இதனால் முக்கிய நகரங்களில் உள்ள சுமார் 2 மில்லியன் தெரு நாய்கள் கொல்லப்படலாம் என சமூக ஆர்வலகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய அரசியின் குறித்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இதுவரை 56,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு உக்ரைன் மற்றும் போலந்து நாடுகள் இணைந்து நடத்திய கால்பந்து தொடருக்கு முன்னரும் இதே போன்ற நடவடிக்கையை உக்ரைன் அரசு மேற்கொண்டது.

அதில் தெரு நாய் ஒன்றுக்கு 35 பவுண்ட்ஸ் என விலை பேசி குழுக்களை முக்கிய நகரங்களில் களமிறக்கினர். தற்போது அதே பாணியில் ரஷ்ய அரசும் தெரு நாய்களை அப்புறப்படுத்த திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. Volgograd நகரில் தெரு நாய்களை கொல்ல சுமார் 25,500 பவுண்ட்ஸ் ஒதுக்கியுள்ளனர்.

ரஷ்ய அரசின் இந்த நடவடிக்கையானது மிருக நல ஆர்வலர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

சர்வதேச கால்பந்து சம்மேளனமும் இந்த படுகொலையை கண்டுகொள்ளவில்லை என அவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்