நண்பர்களை அச்சுறுத்த நபர் செய்த செயல்: கொந்தளித்த சமூக ஆர்வலர்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் இளைஞர் ஒருவர் தனது நண்பர்களை வேடிக்கை காட்டும் பொருட்டு சிங்கம், பாம்பு உள்ளிட்ட வன விலங்குகளை படுக்கை அறையில் விட்டது தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் குடியிருக்கும் Khizri Zapirov என்ற இளைஞரே தற்போது வன விலங்கு ஆர்வலர்களால் கண்டனத்து உள்ளாகியுள்ளவர்.

இவர் தமது நண்பர்களை வேடிக்கை காட்டும் வகையில் அவர்கள் தூங்கிகொண்டிருக்கும் போது அவர்களது படுக்கை அறையில் பாம்பு, சிங்கம் மற்றும் முதலை உள்ளிட்ட வன விலங்குகளை உள்ளே விட்டுள்ளார்.

திடீரென்று அறைக்குள் வன விலங்குகளை பார்க்கும் நண்பர்கள் அலறியடித்து வெளியேறுவதையும், அதிர்ச்சியில் கத்துவதையும் குறித்த நபர் காணொளியாக பதிவு செய்து வந்துள்ளார்.

அந்த காணொளி பதிவுகளை அவர் சமூக வலைதளத்தில் பதிவெற்றியும் வந்துள்ளார். இதற்கு வரவேற்பு பெருகியது போன்று கடும் கண்டனங்களும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் வன விலங்கு உரிமையாளர்கள் சமூக வலைதளங்களில் இருந்து குறித்த காணொளிகளை நீக்கவும், தொடர்புடைய நபர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி பொலிசாரை நாடியுள்ளனர்.

இதனிடையே தனது காணொளிகளில் தோன்றும் மிருகங்கள் அனைத்தும் தமது நண்பர்களிடம் இருந்து கடனாக பெற்றுள்ளதாகவும், விலங்குகள் மற்றும் தமது நண்பர்களின் உயிருக்கு அச்சுறுத்தும் வரையில் எந்த நடவடிக்கையிலும் தாம் இறங்கியது இல்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...