முன்னாள் காதலியை தென் கொரியாவுக்கு அனுப்பி வைத்த வடகொரிய தலைவர்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
353Shares

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதை ஒட்டி, தமது முன்னாள் காதலியும் பாடகியுமான Hyon Song-wol என்பவரை கிம் ஜோங் உன் கலைக்குழு சார்பில் தென் கொரியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

வடகொரியாவின் பிரபல பாடகியாக வலம் வந்தவர் Hyon Song wol. இவரையே ஆபாச வீடியோவில் நடித்ததாக கூறி கடந்த 2013 ஆம் ஆண்டு கிம் அரசு படுகொலை செய்ததாக தகவல் வெளியாகி பரபரபபை ஏற்படுத்தியது.

கிம் அரசு அரசியல் படுகொலைகளை சர்வசாதாரணமாக நடத்தி வந்துள்ளதை சர்வதேச ஊடகங்கள் பலவும் வெளிச்சமிட்டு காட்டியுள்ளன.

அந்த வகையிலேயே பாடகி Hyon Song-wol படுகொலையும் பரவலாக பேசப்பட்டது. ஆனால் அதன் அடுத்த ஆண்டு அவர் டிவி நிகழ்ச்சிகளில் தோன்றி தாம் உயிருடன் இருப்பதை நிரூபித்தார்.

பாடகி Hyon Song-wol மற்றும் அவரது குழுவை சேர்ந்த 11 பேர் மீது ஆபாச படத்தில் நடித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட கிம் அரசு, அவர்களுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.

தற்போது குளிர்கால ஒலிம்பிக் தொடர்பில் வடகொரியாவில் இருந்து செல்லும் கலைக்குழுவினருக்கு பாடகி Hyon Song-wol தலைமை தாங்கி செல்ல உள்ளார் என வடகொரிய அரசு அறிவித்துள்ளது.

ஆனால் தமது முன்னாள் காதலியை தென் கொரியாவுக்கு அனுப்பும் திட்டம் என்ன என்பது குறித்து இதுவரை நம்பத்தகுந்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்