பொலிசாரால் சித்திரவதை செய்யப்பட்ட நான்கு வயது சிறுவன்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
126Shares

நான்கு வயது சீனச் சிறுவனை தங்கள் வாகனத்தால் மோதிய பொலிசார் அவனை 36 மணி நேரம் பொலிஸ் காவலில் வைத்தனர்.

Falun Gong என்பது சீனாவில் பிரபலமாகி வரும் ஒரு ஆன்மீக அமைப்பு. கோடிக்கணக்கானபேர் இதை பின்பற்றிவரும் நிலையில், 1999ஆம் ஆண்டு ஜூலை மாதம் சீன அரசு இந்த அமைப்பிற்கு தடை விதித்தது.

Liu Gexin என்னும் பெண் Beijingஇல் இந்த அமைப்பைக்குறித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது பொலிசார் அவளைக் கைது செய்தனர்.

அவளைக் கைது செய்ய விரையும்போதுதான் Xiaoyu என்ற அவளது நான்கு வயது மகனான சீனச் சிறுவனை பொலிசார் தங்கள் வாகனத்தால் மோதினர்.

தாயை ஓரிடத்திலும் மகனை ஓரிடத்திலுமாக அடைத்து வைத்த பொலிசார், இருவரையும் தனித்தனியே விசாரணை செய்தனர்.

பொலிசாரால் கைது செய்யப்பட்ட ஒரு சிறுவனைக் குறித்த செய்தியாக வெளிவந்த இந்த விஷயத்தின் பின்னால் ஒரு மாபெரும் ரகசியம் அடங்கியுள்ளது.

Falun Gong என்னும் ஆன்மீக அமைப்பைப் பின்பற்றுபவர்கள் என்ற பெயரில் கைது செய்யப்படும் இலட்சக்கணக்கானவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதோடு சட்ட விரோதமாக அவர்களது உறுப்புகள் திருடப்படுகின்றன என்னும் மறைக்கப்பட்ட உண்மைதான் அது.

2015 ஆம் ஆண்டின் Miss World Canada பட்டம் பெற்ற Anastasia Lin என்னும் எப்படியாவது உலகுக்குத் தெரியப்படுத்திவிட வேண்டும் என்று முயற்சி செய்தபோது பல்வேறு வகையில், அவரது முயற்சி தடுக்கப்பட்டது.

தற்போது இந்த உறுப்புக் கொள்ளைகளைப்பற்றிப் பேச வந்துள்ள Anastasia Lin தனது தந்தையைப் பிடித்து வைத்துக்கொண்டு தன்னைப் பேச விடாமல் சீன அரசு மிரட்டியதை திகிலுடன் நினைவு கூறுகிறார்.

சீன அரசின் இச்செயலுக்கெதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ள அமெரிக்கா, இந்த உறுப்புக் கொள்ளைக் குறித்த ஆதாரங்கள் இப்போதுதான் கிடைத்துள்ளதாகவும் இது நிறுத்தப்படவேண்டும் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்