சீனர்களுக்குப் பட்டுக் கம்பளம் விரிக்கும் ஐரோப்பா

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
64Shares

சீனர்கள் சுற்றுலாவுக்காக அதிகம் செலவு செய்பவர்கள்.

ஐரோப்பாவுக்கு வருகை தரவிருக்கும் சீனர்களின் எண்ணிக்கை வரும் ஐந்தாண்டுகளில் 70 சதவிகிதம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால் ஐரோப்பிய நாடுகள் சீன சுற்றுலாப்பயணிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கத் தயாராகி வருகின்றன.

2017ஆம் ஆண்டில் 12.4 மில்லியன் சீன சுற்றுலாப்பயணிகள் ஐரோப்பா வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2020வாக்கில் 20.8 மில்லியனாக உயரும் என்று சீன சுற்றுலா அமைப்பு எதிர்பார்க்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் வரை, ஷாப்பிங் செய்வதற்கு மட்டுமே ஐரோப்பா வந்த சீனர்கள், இன்று ஐரோப்பியக் கலாச்சாரத்தை அறியவும் இயற்கையோடு இயைந்துள்ள கிராமப்பகுதிகளைக் காண்பதற்காகவும் வரத் தொடங்கியுள்ளனர்.

அதிக மாசு நிரம்பிய பகுதிகளில் இருந்து வரும் அவர்கள், உணவு வகைகளையும், இசையையும், நீல வானத்தையும் ரசிக்கிறார்கள்.

இருமல் வராமல் சுவாசிக்க முடிகிறதே என்று சிலர் ஆச்சரியப்படுகிறார்களாம்.

சுற்றுலாவுக்காக 123 பில்லியன் டாலர்கள் செலவிடும் அமெரிக்கர்களை விட சீனர்கள் அதிகம் (261 பில்லியன் டொலர்கள்) செலவிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்