பிறந்து 2 மணி நேரமே ஆன குழந்தை..தந்தை செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய காட்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் பிறந்து இரண்டு மணி நேரமே ஆன குழந்தையை, தந்தை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் Xuanweiபகுதியில் பெண் ஒருவர் குப்பைத் தொட்டியில் பிறந்து சில மணி நேரங்களிலே ஆன குழந்தையை பார்த்து, உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், அது குறித்து விசாரணை மேற்கொண்ட போது அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்து பார்த்துள்ளனர்.

அப்போது அதில் நபர் ஒருவர் குழந்தையை கொண்டு வந்து குப்பை தொட்டியில் போடுகிறார். அதன் பின் குறித்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, இது தன்னுடைய குழந்தை தான் என்றும், பிறந்தவுடன் குழந்தையின் நிறம் ஊதா நிறத்தில் மாறியது.

இதனால் குழந்தைக்கு தீர்க்க முடியாத நோய் வந்துவிட்டது, சீக்கிரம் இறந்துவிடும் என்று எண்ணி குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசி விட்டுச் சென்றதாக கூறியுள்ளார்.

ஆனால் இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், குழந்தை பிறந்த நேரம் மிகவும் குளிராக இருந்ததால், அந்த நிற மாற்றம் ஏற்பட்டுள்ளது, மற்ற படி குழந்தை நன்றாக ஆரோக்கியமாக இருப்பதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து தந்தை மற்றும் தாயாரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், மீட்கப்பட்ட குழந்தை ஆனாதைகள் இல்லத்தில் சேர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தையை மீட்ட பெண்ணை இணையவாசிகள் குழந்தையை காப்பாற்றிய தெய்வம் என்று பாராட்டி வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்