பிரசவ வார்டில் டாக்டருடன் குத்தாட்டம் போட்ட நிறைமாத கர்ப்பிணி: வைரல் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

பிரேசிலில் மருத்துவர் ஒருவர் பெண்ணுக்கு வலியில்லாமல் பிரசவம் நடக்க பிரசவ வார்டில் அவருடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ வைரலாகியுள்ளது.

அறிவியல் ஆராய்ச்சியின் படி இது நிரூபிக்கப்பட்ட உண்மை என நடனமாடிய மருத்துவர் பெர்ணாண்டோ குயிடீஸ் கூறியுள்ளார்.

அந்த வீடியோவில் கர்ப்பிணி பெண்ணுடன் சேர்ந்து ஒரே மாதிரி நடன அசைவுகளுடன் உடலை வளைத்து பெர்ணாண்டோவும் ஆடுகிறார்.

இப்படி செய்வதால் குழந்தையை பிரசிவிக்கும் பெண்கள் பயமில்லாமல் ரிலாக்சாக இருப்பார்கள் எனவும் பெர்ணாண்டோ கூறியுள்ளார்.

பல கர்ப்பிணிக்கு இது போன்ற நடன அசைவுகளை பெர்ணாண்டோ சொல்லி கொடுத்துள்ளார்.

குறித்த வீடியோவை இதுவரை 249,000 பேர் பார்த்துள்ள நிலையில் வைரலாகியுள்ளது.

இதோடு பிரசவத்துக்கு வந்த பெண்ணின் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் மருத்துவர் பெர்ணாண்டோ வெளியிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்