மார்பு தெரிய ஆடை உடுத்தும் விமான பணிப்பெண்கள்: கொந்தளித்த பெண் பயணி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

மலேசியாவில் இருந்து செயல்படும் ஏர் ஆசியா விமான பணிப்பெண்களின் சீருடை தொடர்பில் பெண் பயணி ஒருவர் அந்த நாட்டு அமைச்சகத்திற்கு கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

அதில் அவர், ஏர் ஆசியா விமான பணிப்பெண்களின் சீருடை உண்மையில் அருவருப்பை தூண்டுகிறது.

விமான பணிப்பெண்களின் உள்ளாடை வரை வெளியே தெரியும் அளவுக்கு சீருடை வழங்கப்பட்டுள்ளது கண்டிப்பாக பாராட்டுதலுக்கு உரியதன்று.

குட்டைப் பாவாடையுடன் விமான ஊழியர்கள் வலம்வருவது கண்டனத்துக்கு உரியது. இது மலேசியாவின் நற்பெயரை சிதைக்கும் செயல்.

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் ஒரு ஏர் ஆசியா ஊழியர் குனிந்தபோது அவரது உள்ளாடையை என்னால் காண முடிந்தது.

இதைவிட மோசமான செயல் வேறு உண்டா என கேள்வி எழுப்பியுள்ள அவர், நியூசிலாந்தில் இருந்து கடந்த 10 வருடமாக ஆண்டுக்கு இருமுறை தாம் மலேசியா வந்து செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மலேசிய பெண்கள் ஒருபோதும் பாலியல் தொழிலாளர்கள் போன்று ஆடை உடுத்தமாட்டார்கள், அடுத்தவர்களிடம் மிகவும் மரியாதையாக நடந்து கொள்பவர்கள் என்பதாலையே அவர்களை அனைவருக்கும் பிடிக்கும்.

ஆனால் ஏர் ஆசியா விமான் ஊழியர்கள் மலேசியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள்.

இருப்பினும், ஆண்கள் மிகவும் மரியாதையுடன் ஆடை உடுத்தியுள்ளனர் என குறிப்பிட்டுள்ள அவர்,

மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு ஏர் ஆசியா விமான ஊழியர்கள் சீருடை அணிய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

விலைமாதர்கள் போன்று ஆடை உடுத்துவது மலேசியாவில் வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு தவறான எண்ணத்தை பதியவைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்