வடகொரியாவின் பலே திட்டம்: முறியடிக்குமா தென் கொரியா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

தென் கொரியாவில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவிருக்கும் வீரர்களுடன் மிக ரகசியமாக உளவாளிகளையும் அனுப்பி வைக்க வடகொரியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் தங்கள் நாட்டு ரகசியங்கள் வெளி உலகிற்கு கசியாமல் இருக்கும் என வடகொரிய அதிகாரிகள் நம்புகின்றனர்.

சியோலில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் எதிரும் புதிருமாக இருந்துவரும் இரு கொரிய நாடுகளும் ஒரே கொடியின் கீழ் கலந்துகொள்ள இசைந்துள்ளது.

இது இரு நாட்டு உறவையும் பலப்படுத்தும் என சர்வதேச அளவில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஊடாக வடகொரியா செயல்படுத்தவிருக்கும் பலே திட்டம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இரு நாட்டு வீரர்களும் இணைந்து செயல்பட்டாலும் வடகொரிய வீரர்களை கண்காணிக்க ஒரு குழு தென் கொரியா செல்ல இருப்பதாகவும்,

என்ன பேச வேண்டும், யாருடன் பேச வேண்டும் என்பது தொடர்பான உத்தரவுகளை குறித்த கண்காணிப்பு குழு வீரர்களுக்கு அளிக்கும் என கூறப்படுகிறது.

மட்டுமின்றி சந்தேக நபர்களுடன் வடகொரிய வீரர்கள் தொடர்பு கொண்டால், அதை கண்காணித்து எச்சரிக்கை செய்யவும் இந்த குழுவினர் பணிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் வடகொரிய வீரர்கள் தங்கள் நாட்டு அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி ஒருபோதும் செயல்படமாட்டார்கள் எனவும், அதனால் ஏற்படும் விளைவுகள் மிக கடுமையானது என அவர்களுக்கு நன்கு தெரியும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெப்ரவரி 25 ஆம் திகதி வரை குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடைபெறுகிறது. இதில் 300 பேர் கொண்ட கலைக்குழுவினரை வடகொரியா அனுப்ப திட்டமிட்டுள்ளது.

மட்டுமின்றி 3 போட்டிகளில் பங்கேற்கும் 22 பேர் கொண்ட விளையாட்டு வீரர்களை மேலும் அனுப்ப வடகொரியா இசைந்துள்ளது.

மேலும் இரு கொரியாவும் இணைந்து மகளிர் ஐஸ் ஹொக்கி அணியையும் களமிறக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்