எங்களை காப்பாற்றுங்கள்.. காபூல் ஹொட்டலில் இருந்து வந்த போன்: பயங்கரவாத தாக்குதலில் நடந்த சோகம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள இண்டர்காண்டினேன்டல் ஹொட்டலில் நேற்று மாலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

கடந்த பல மணிநேரமாக தீவிரவாதிகள் மக்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து இருந்தனர். தற்போது குறித்த தாக்குதலை ராணுவத்தினர் முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

குறித்த தாக்குதலில் எத்தனை பேர் மரணம் அடைந்துள்ளனர் என்ற தகவல் அதிகாரபூர்வமாக இதுவரை வெளியாகவில்லை.

இந்த தாக்குதலின்போது பத்திரிக்கையாளர்களுக்கு ஹொட்டலின் உள்ளே இருந்து ஒருவர் தொலைபேசியில் அழைத்து இருக்கிறார்.

அவர் உதவி கேட்கும் அந்த போன் கால் ரெக்கார்ட் செய்யப்பட்டுள்ளது. குறித்த ஹொட்டலுக்கு நான்கு தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மட்டுமின்றி ஐந்து மாடி கட்டிடத்தையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். அங்கு இருந்த ஊழியர்கள், வெளிநாட்டு பயணிகளை அடைந்து வைத்துள்ளனர்.

இந்த தாக்குதல் தொடங்கிய போது ஆப்கானிஸ்தானில் இருக்கும் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றிற்கு போன் கால் ஒன்று வந்து இருக்கிறது.

அதில் ''நான் இந்த ஹோட்டலுக்குள் சிக்கியுள்ளேன் என்னை காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார்.'' அவருடைய பெயர் எதுவும் வெளியிடப்படவில்லை.

அவர் போன் காலில் நிறைய விவரங்கள் சொல்லியுள்ளார். அதில் ''இங்கு நான்கு தீவிவாதிகள் இருக்கிறார்கள். நான் ஒளிந்து கொண்டு இருக்கிறேன்.

அவர்கள் நிறைய பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து இருக்கிறார்கள். பயங்கர ஆயுதம் வைத்துள்ளார்கள்'' என்று கூறியுள்ளார்.

குறித்த தகவல் உடனடியாக ராணுவத்திற்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கால் செய்யும் போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கிறது.

இவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது ராணுவத்திற்கு தெரியாமல் இருக்கிறது. இவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்