வழக்கம் போல் தனது ஹெல்மட்டை எடுத்த தீயணைப்பு வீரருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

அவுஸ்திரேலியாவில் தீயணைப்பு வீரர் ஒருவரின் ஹெல்மட்டில் பாம்பு ஒளிந்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள ரூதர்போர்ட் தீயணைப்பு நிலையத்தில் வேலை செய்து வரும் தீயணைப்பு வீரர், வழக்கம் போல் பணிக்கு செல்வதற்காக ஹெல்மட்டை எடுத்துள்ளார்.

அப்போது அவர் ஹெல்மட்டை பார்த்த போது, உள்ளே பாம்பு ஒன்று இருந்துள்ளது, இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக வன விலங்கு ஆர்வலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வன விலங்கு ஆர்வலர்கள், பாம்பை ஹெல்மெட்டில் இருந்து வெளியேற்ற முயற்சித்தனர். ஆனால், ஹெல்மெட்டில் இருந்து வெளிவர மறுத்த பாம்பு, சிறுது நேர போராட்டத்துக்கு பிறகு வெளியேறியது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்