நீங்க கர்ப்பமா இருக்கீங்க? வயிற்றை வீங்க வைத்து நூதன மோசடி

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

கென்யாவில் பெண்மணி ஒருவர் கர்ப்பம் தரிக்க வைக்கிறேன் எனக்கூறி இலைகள் மற்றும் மூலிகைகளை கொடுத்து பெண்களை ஏமாற்றிய குற்றத்திற்காக கைது செய்யப்பபட்டுள்ளார்.

பாண்டா காமாரா என்ற பெண்மணி, குழந்தை பாக்கியம் கொடுப்பதாக கூறி மருத்துவ சிகிச்சையை நடத்தி வந்துள்ளார்.

இவரிடம் வரும் பெண்களிடம், வயிறை வீங்கவைக்ககூடிய இலைகள் மற்றும் மூலிகைகளை கொடுத்துள்ளார்.

இதனை சாப்பிட்டு சில மாதங்கள் கழித்து வருமாறு கூறியுள்ளார், இந்த இலைகளை சாப்பிட்டதால் அப்பெண்களின் வயிறு வீங்கியுள்ளது. இதனைப்பார்த்த அப்பெண், இப்போது நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் எனக்கூறி அனுப்பியுள்ளார்.

ஆனால், அது பின்னர் பொய்யான தகவல் என பின்னர்தான் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தெரியவந்துள்ளது,

இதற்காக, அவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் 33 டொலர்கள் வரை கட்டணம் செலுத்தி இருக்கிறார்கள். அந்ந நாட்டின் சராசரி மாத வருமானமே 48 டொலர்கள்தான்.

மேலும், இவரிடம் செல்லும் பெண்கள் இவருக்கு, கோழியும், துணியும் வாங்கிகொடுக்க வேண்டும்.

உலக சுகாதார நிறுவனத்தின், 2006 ஆம் ஆண்டு கணக்குப்படி, 80 சதவிகித ஆஃப்ரிக்கர்கள் மரபு சிகிச்சை முறையைதான் பின்பற்றி வருகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்