முதலிரவு அன்று மணமகள் செய்த தவறு: மணமகன் வீட்டார் எடுத்த முடிவு

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

கம்போடியாவில் திருமண நாள் அன்று கணவர் என்று நினைத்து மற்றொரு நபருடன் உறவு கொண்ட பெண்ணின் திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Prey Veng மாகாணத்தை சேர்ந்த 18 வயது பெண்ணிற்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் முடிந்துள்ளது.

முதலிரவு அன்று, இப்பெண் தனது கணவர் எனது நினைத்து மற்றொரு நபருடன் உறவு கொண்டுள்ளார், விளக்கு அணைத்து இருந்த காரணத்தால், அறையில் இருந்த நபர்தான் தனது கணவர் என நினைத்துள்ளார்.

சிறிது நேரம் கழித்துதான், இவர் உறவு கொண்டது தனது கணவர் கிடையாது என தெரியவந்ததையடுத்து சத்தம் போட்டு பெற்றோர்களை எழுப்பியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் பெற்றோர், இதுகுறித்து பொலிசிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Chhoen Chanseng என்ற அந்த இளம்வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசார் அவனிடம் நடத்திய விசாரணையில், இந்த இளைஞன் அப்பெண்ணை காதலித்து வந்துள்ளான், ஆனால் இவன் ஏழை குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் பெற்றோர் திருமணத்திற்கு மறுத்துள்ளனர்.

இதனால், திருமண நாள் முழுவதும் மணமக்களை கவனித்துக்கொண்டிருந்த இந்த இளைஞன், இந்த செயலில் ஈடுபட்டுள்ளான் என்பது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், மணமகன் வீட்டார் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். நாங்கள் இப்பெண்ணை மருமகளாக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும், இவர்கள் கொடுத்த வரதட்சணை தொகையான £1,000- ஐ திருப்பி கொடுத்துவிடுகிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்