பார்ப்போரை கண்கலங்க வைத்த சம்பவம்: பூனையை தவிர அனைத்தையும் இழந்த முதியவர்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

துருக்கியின் கருங்கடல் பகுதியிலுள்ள Ordu நகரைச் சேர்ந்தவர் 83 வயது Ali Mese, ஒரு நாள் சமையல் செய்வதற்காக அடுப்பைப் பற்ற வைத்தார்.

விறகு சரியாக எரியாததால் கொஞ்சம் பெட்ரோலை ஊற்ற, அது குப்பென்று வெடிக்க வீடு முழுவதும் தீப்பிடித்தது.

கட்டிய வீடு கண் முன்னே பற்றி எரிய, எதுவும் செய்ய இயலாமல் கண்ணீர் மல்க தனது பூனைக்குட்டியை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அவர் நின்ற காட்சி காண்போரைக் கலங்கச்செய்தது.

அக்கம்பக்கத்தோர் தீயணைப்பு படைக்கு தகவல் கொடுக்க, அவர்கள் வந்தபோது கரிக்கட்டைகள்தான் மிச்சமிருந்தது.

Ali Meseக்கோ அவரது குடும்பத்திற்கோ பெரிய காயங்கள் எதுவும் இல்லையென்றாலும் அவரது வீடு முழுவதும் அழிந்துவிட்டது.

வெறும் பென்ஷனில் வாழ்க்கை நடத்தும் அவரது கோழிகள், பூனைகள் (ஒரு செல்லப்பூனை தவிர்த்து) அனைத்தும் அழிந்துபோய்விட்டன.

அவர் தனது செல்லப்பூனைக்குட்டியுடன் சோகமாக காட்சி தரும் புகைப்படங்கள் வலைத்தளங்கள் வழியாக பலரது இதயங்களைச் சென்றடைந்துள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்