வட கொரியாவை நம்பவேண்டாம்: எச்சரிக்கும் ஜப்பான்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஒலிம்பிக்கின் பெயரால் வட கொரியா உலகத்தை ஏமாற்றப் பார்க்கிறது, அதை நம்ப வேண்டாம் என்று ஜப்பான் கூறியுள்ளது.

நீண்ட காலத்திற்குப்பின் வட கொரியா, தென் கொரியாவுடன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது.

Vancouver இல் நடைபெற்ற 20 நாடுகள் சந்திப்பு ஒன்றில் ஜப்பானின் வெளியுறவுத்துறை அமைச்சர் Tara Kono இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது வட கொரியாவின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கான நேரமோ அல்லது அதை அங்கீகரிப்பதற்கான நேரமோ அல்ல.

வட கொரியா பேச்சு வார்த்தைக்கு இறங்கி வந்திருக்கிறது என்றால், அதன் மீது விதிக்கப்பட்ட தடைகள் வேலை செய்யத் தொடங்கியுள்ளன என்று பொருள்” என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் Secretary of State, Rex Tillerson கூறுகையில், வட கொரியாபேச்சு வார்த்தைக்கு இறங்கி வரும் அளவுக்கு அதை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆலோசனைக் கவுன்சில் பல தடைகளை விதித்துள்ள போதிலும்வட கொரிய அதிபர் அமெரிக்காவைத் தாக்கக்கூடிய அளவு திறன் வாய்ந்த அணு ஏவுகணை சோதனைகள் நடத்துவதை நிறுத்த மறுத்து வருகிறார்.

தடைகள் எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை வட கொரியாவுக்குக் காட்ட அனைத்து நாடுகளும் சேர்ந்து செயல்படவேண்டும் என்று கூறியுள்ள Tillerson, எப்போதெல்லாம் அது அடம்பிடிக்கிறதோ அப்போதெல்லாம் அதன் விளைவுகளை வட கொரியா அனுபவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

வட கொரியாவிலிருந்து ஒலிம்பிக்கிற்காக குறைந்த எண்ணிக்கையிலான விளையாட்டு வீரர்களே அனுப்பப்பட உள்ளனர் என்பதும் வட கொரிய அதிபரே தேர்ந்தெடுத்த cheering squad தென் கொரியாவிற்கு செல்ல உள்ளதும் குறிப்பிடத்தக்கவையாகும்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்