திருமணமான ஆணிடம் காதலை கூறிய பெண்: ஆண் கூறிய பதில்! வைரல் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

நைஜீரியாவில் திருமணமான ஆணிடம் இளம்பெண் தனது காதலை வெளிப்படுத்திய நிலையில் தனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டடது என ஆண் கூறியுள்ளார்.

நாட்டில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் இது சம்மந்தமான வீடியோ எடுக்கப்பட்டு வைரலாகியுள்ளது.

அதில் பெண்ணொருவர் தனது நண்பர்களுடன் இருக்கும் நிலையில், தான் காதலிக்கும் ஆணுக்காக காத்து கொண்டிருக்கிறார்.

அப்போது அந்த ஆண் வருகிறார், இதையடுத்து ஒரு முட்டியை தரையில் வைத்து தனது காதலை ஆணிடம் வெளிப்படுத்துகிறார்.

இதன் பின்னர், தன்னிடம் காதலை சொன்ன பெண்ணின் காது அருகில் சென்ற ஆண் நான் ஏற்கனவே திருமணமானவன் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதை தாங்கி கொள்ள முடியாத பெண் கத்தி கொண்டு கதறி அழுத நிலையில் பெண்ணின் தோழி அவரை சமாதானப்படுத்துவது போல வீடியோவில் உள்ளது.

ஷாப்பிங் மாலில் இருந்த யாரோ இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்