டிசம்பரில் வெறும் 6 நிமிடங்கள் மட்டுமே சூரிய வெளிச்சத்தை பார்த்த மக்கள்: எங்கே தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கடந்த டிசம்பர் மாதம் வெறும் 6 நிமிடங்கள் மட்டுமே சூரிய வெளிச்சத்தை அங்குள்ள மக்கள் பார்த்துள்ளனர்.

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் சுமார் 18 மணி நேரம் மாஸ்கோவில் வெயில் அடிக்கும் என கூறும் ஆய்வாளர்கள்,

கடந்த டிசம்பர் மாதம் மிகவும் இருள் சூழ்ந்த மாதமாக இருந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி டிசம்பர் மாதத்தில் தினசரி ஒரு மணி நேரமேனும் சூரிய வெளிச்சம் தென்படும் எனவும் ஆனால் கடந்த டிசம்பரில் மொத்தமாக வெறும் 6 நிமிடங்கள் மட்டுமே சூரிய வெளிச்சத்தை மக்கள் பார்த்துள்ளனர்.

கடந்த 2000-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மாஸ்கோவில் 3 மணி நேரம் மட்டுமே சூரிய வெளிச்சத்தை மக்கள் பார்த்துள்ளனர்.

இதுவே அப்போது வரைக்கும் சாதனையாக இருந்து வந்துள்ளது. மேலும் மாஸ்கோவில் கிழக்கே 3,300 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள Yakutia கிராமத்தில் வெப்பநிலை -67C என பதிவாகி, உலகின் கடுங்குளிர் பிரதேசம் என்ற பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்