சவுதி அரேபியாவில் பெண்களுக்கு அடுத்த ஆபர் ரெடி: விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு

Report Print Santhan in ஏனைய நாடுகள்
144Shares
144Shares
ibctamil.com

சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனங்கள் ஓட்டலாம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்நாட்டில் உள்ள பெண்கள் டாக்சி ஓட்டுநர்களாக விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் மற்றும் அவரது மகன் முகமது பின் சல்மான் ஆகிய இருவரும் சமீப காலமாக தொடர்ந்து பல்வேறு பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்களை கொண்டு வருகின்றனர்.

அதில் முதல் கட்டமாக, சவுதியில் இனி பெண்கள் கார் போன்ற வாகனங்கள் ஓட்டலாம் என்று கடந்த செப்டம்பர் மாதம் 26-ஆம் திகதி மன்னர் உத்தரவிட்டார்.

இது 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து அமலுக்கு வரவிருக்கிறது. இவர்களின் திட்டங்கள் அனைத்துமே பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பது போன்று அமைந்துள்ளது.

இந்நிலையில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற உபேர் மற்றும் துபாயை சேர்ந்த கரீம் ஆகிய கால் டாக்ஸி நிறுவனங்கள், பெண் ஓட்டுனர்களை பணியமர்த்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும், சவுதி அரேபியாவில் பெண்கள் அதிக அளவில் கால் டாக்ஸிகள் பயன்படுத்துவதால், இந்த திட்டம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று நம்பப்படுகிறது.

மேலும் இதன் காரணமாக 10 ஆயிரம் பெண் ஓட்டுநர்கள் பணியமர்த்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்