கொடுமைக்கார கணவரிடம் இருந்து தப்பிக்க இரண்டாவது மாடியில் இருந்து குதித்த பெண்: நேர்ந்த துயரம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
539Shares
539Shares
ibctamil.com

பிரேசில் நாட்டில் கொடுமைக்கார கணவரிடம் இருந்து தப்பித்துக் கொள்ளும் பொருட்டு குடியிருப்பின் இரண்டாவது மாடியில் இருந்து பெண் ஒருவர் குதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது மாடியில் இருந்து குதித்த குறித்த பெண் இனி வாழ்நாளில் எழுந்து நடமாட முடியாத அளவுக்கு பாதிப்புக்குள்ளானதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு பிரேசிலின் மனாஸ் பகுதியிலேயே குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. Taiane Falco Rios(23) என்ற அந்த பெண் 20 அடி உயரம் கொண்ட தமது குடியிருப்பின்பால்கணியில் இருந்து குதித்துள்ளார்.

அவரது கணவர் Diego Felipe Pereira Santana(27) சம்பவத்தன்று முகத்தில் சரமாரியாக குத்துவிட்டதாகவும், தலையை சுவற்றில் மோதவிட்டு துன்புறுத்தியதாகவும் அவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

தினமும் மது அருந்திய நிலையில் குடியிருப்புக்கு வரும் சான்றனா, தமது மனைவி தன்னை ஏமாற்றுவதாக கூறி கொடூரமாக தாக்கி வந்துள்ளார். பல முறை கொலை முயற்சியிலும் அவர் ஈடுபட்டுள்ள நிலையில், சம்பவத்தன்று இதேவிவகாரம் தொடர்பில் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒருகட்டத்தில் திடீரென்று அவர் சமையலறைக்கு விரையவும், தம்மை கொல்ல கத்தி எடுக்கச் செலவதாக கருதிய இவர் தங்களது குடியிருப்பின் பால்னணி வழியாக வெளியே குதித்துள்ளார்.

20 அடி உயரத்தில் இருந்து குதித்ததால் பலமாக அடிபட்ட அவர் சுய நினைவற்று விழுந்த இடத்திலேயே நகர முடியாமல் படுத்திருந்துள்ளார். இந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கும் பொலிசாருக்கும் தகவல் அளிக்கவே உடனடியாக மருத்துவக்குழு வந்து அவரை மீட்டுள்ளது. இதனிடையே சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் மனைவியை குற்றுயிராக தாக்கிய சன்றனாவை கைது செய்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்