இங்கு சென்றால் உயிரோடு திரும்பமாட்டார்கள் ! திகிலூட்டும் கிராமம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
536Shares
536Shares
ibctamil.com

பாறைகளுக்கு அமைந்து பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும் டர்காவ்ஸ் கிராமத்திற்கு சென்றால் மக்கள் உயிருடன் திரும்பவே முடியாது என்ற கருத்து நிலவுகிறது.

ரஷ்யாவின் வடக்கு ஒசட்டியாவின் ஒதுக்குப்புறமாக டர்காவ்ஸ் என்ற கிராமம் அமைந்துள்ளது.

இந்த கிராமம் 5 மலைகள் அமைந்துள்ள இடத்தில் உள்ளது, ஏராளமான குன்றுகள் இங்கே உள்ளது.

இந்த கிராமம் மிக அழகாக இருந்தாலும், யாரும் இங்கு செல்ல விரும்பவதில்லை, ஏனெனில் இந்த கிராமத்திற்கு செல்பவர்கள் யாரும் உயிரோடு திரும்ப மாட்டார்களாம்.

இறந்தவர்கள் மட்டும் வாழும் கிராமமாக இது கருதப்படுகிறது. இதற்கு Dead Village என்று பெயர்.

இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் இறந்த உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகள் பல மாடிகளை கொண்டுள்ளன. இவற்றின் ஒவ்வொரு தளத்திலும் இறந்த உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன.

இந்த கிராமத்தில் சுமார் 99 கட்டிடங்கள் உள்ளன, இங்கு இறந்த உடல்களை புதைக்கும் பழக்கம் 16 ஆம் நூற்றாண்டு முதல் இருக்கிறது.

இங்கு செல்லாததற்கு மற்றுமொரு முக்கிய காரணம், இங்கு நிலவும் கடுமையான வானிலையாகும்.

மேலும், மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது, 19 ஆம் நூற்றாண்டில் இந்த கிராமத்தில் வாழ்ந்த மக்கள் கடுமையான நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.

அந்த நோயின் தீவிரம் குறையும் இவர்கள் வேறு எங்கும் செல்லவில்லை. இவர்கள் இறந்தபின்னர் கூட அவர்களது வீட்டிலேயே புதைக்கப்பட்டனர்

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் , இறந்த உடல்கள் ஒரு படகு வடிவத்தில் இருந்த ஒரு மர பெட்டியில், புதைக்கப்பட்டிருந்தது என்று கூறுகிறார்கள்.

இந்த படகுகள் கடந்த காலத்தின் நம்பிக்கையாக இருந்தன, ஆன்மா சொர்க்கத்தை அடைவதற்கு இது உதவியதால், அவர்கள் ஒரு படகு வடிவ பெட்டியில் புதைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த கிராமத்தில் உள்ள கிணற்றில் நாணயங்கள் வீசப்பட்டுள்ளன, அதாவது இறந்தவர்கள் புதைக்கப்பட்ட பிறகு இந்த கிணற்றில் நாணயங்களை வீசுகையில், ஒரு நாணயத்தின் அடிப்பகுதி மற்றொன்று மோதினால் இறந்தவர்களின் ஆத்மா பரலோகத்தை அடைந்துவிட்டது என்பது இவர்களது நம்பிக்கை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்