கரீபியன் கடலில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
173Shares
173Shares
ibctamil.com

கரீபியன் கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஜமைக்கா, மெக்ஸிகோ, ஹோண்டூராஸ், கியூபா உள்ளிட்ட பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அமெரிக்காவின் Honduras-க்கும் Cayman தீவுக்கும் இடையே செவ்வாய்கிழமை அந்நாட்டு நேரப்படி இரவு 9.51 மணிக்கு ஏற்பட்டுள்ளது.

கரீபியன் கடற்கரை பகுதியில் 7.6 என்ற மிகப்பெரிய அளவில் பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.

இதனை தொடர்ந்து Puerto Rico மற்றும் US Virgin தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இதே போல ஜமைக்கா, மெக்ஸிகோ, ஹோண்டூராஸ், கியூபா உள்ளிட்ட பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உடனடியாக இந்த பகுதிகளில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

Honduras ஜனாதிபதி ஜுயன் ஒர்லாண்டோ ஹெர்ணாண்டஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அவசர உதவி ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், மக்கள் அமைதியாக இருக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Puerto Rico மற்றும் மற்ற கரீபியன் தீவுகளில் கடந்தாண்டு செப்டம்பரில் ஏற்பட்ட சூறாவளியில் இருந்து மக்கள் தற்போது தான் மீண்டு வரும் நிலையில் மீண்டும் இதுபோன்ற நிகழ்வு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்