பிறந்தநாளின் போது 8 பிள்ளைகளின் தந்தைக்கு நிகழ்ந்த சோகம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
110Shares
110Shares
ibctamil.com

துருக்கியில் நபர் ஒருவர் தனது பிறந்தநாளின் போது புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக குன்றின் உச்சியில் நின்றுகொண்டிருந்தபோது தவறி விழுந்து உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு டகரியிலுள்ள வரலாற்று சிறப்பு மிக்க உர்ஃபா கோட்டையில் ஒரு பாறையை அணைத்துக்கொண்டு ஹாலில் என்பவர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது, யாரும் எதிர்பாரா விதமாக கால் தவறி 150 அடி உயரத்தில் இருந்து விழுந்துள்ளார். விழும்போது, எதையாவது பிடித்து உயிர்தப்பிக்க முயன்றபோதும் அவரால் முடியவில்லை.

150 அடி கீழே இருக்கும் குர்திஷ் உணவகத்திற்கு அருகே இவர் விழுந்துள்ளார். அவர் 8 பிள்ளைகளுக்கு தந்தையும் ஆவார்.

இறந்துபோன ஹாலிற்கு 8 குழந்தைகள் உள்ளனர். தனது பிறந்தநாளின் போதே இவர் இறந்துபோனது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

வீடியோவை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்