பேருந்து விபத்துக்குள்ளான பகுதியில் எரித்துக் கொல்லப்பட்ட பெண்ணின் சடலம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் 52 பேர் கொல்லப்பட்ட பேருந்து விபத்து நடந்த பகுதியின் அருகாமையில் இருந்து எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் சடலமானது பெட்டிக்குள் வைத்து பேருந்து விபத்து நடந்த பகுதிக்கு அருகாமையில் வீசப்பட்டுள்ளது.

பேருந்து விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் பொலிஸ் அதிகாரிகள் கைவிடப்பட்ட நிலையில் இருந்த குறித்த பெட்டியை மீட்டுள்ளனர்.

விபத்து நடந்து 5 நாட்கள் கடந்துள்ள நிலையில் இந்த பெண்ணின் சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த பகுதிக்கு அருகாமையில் இந்த பெட்டியும் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் பொலிசர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கொல்லப்பட்ட பெண் ஜீன்ஸ் அணிந்தவர் என்றும், கொலைகாரர்கள் ஆதாரங்கள் அனைத்தையும் சிதைக்கும் பொருட்டு சடலத்தை பெட்டியுடன் நெருப்பு வைத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ஆனால் அப்பகுதியில் சக்தி வாய்ந்த காற்று வீசியதால் பெட்டி பாதி எரிந்த நிலையில் தற்போது பொலிசாரின் பார்வைக்கு சிக்கியுள்ளது.

கடந்த 2 ஆம் திகதி டெவில்ஸ் கர்வ் எனப்படும் பகுதியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 52 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

இந்த கோர விபத்தில் ஒருவர் மட்டும் காயங்களுடன் வியக்கும் வகையில் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்