விமானத்தின் கழிவறையில் பிஞ்சு குழந்தையின் சடலம்: அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஐக்கிய அமீரகத்தின் Etihad விமானத்தின் கழிவறையில் ப்ளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் பிறந்த குழந்தையின் சடலத்தை விமானத்தின் துப்புரவாளர்கள் மீட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விவகாரத்தில் தொடர்புடையவராக கருதப்படும் பெண் ஒருவரை தாய்லாந்தில் உள்ள விமான நிலையத்தில் அங்குள்ள பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அடுத்த சேவைக்கு தயாரான விமானத்தை அதன் துப்புரவாளர்கள் சுத்தம் செய்து வந்த நிலையில் இந்த கொடூரக காட்சி கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

குழந்தை எப்போது இறந்தது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை என்ற போதும், கைது செய்யப்பட்ட 37 வயது தாயார்,

ஐக்கிய அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் இருந்து ஜகார்த்தா செல்லும் வழியில் பறக்கும் விமானத்தில் வைத்து குழந்தை பிறந்திருக்கலாம் எனவும்,

அப்போதே அவர் குழந்தையை கொலை செய்து கழிவறை பேப்பரில் பொதிந்து அங்கேயே மரைவு செய்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

குறித்த விமானத்தில் கர்ப்பமான பயணி உதிரப்போக்கால் கடும் அவதிக்கு உள்ளானதை அடுத்து விமானத்தை தாய்லாந்து தலைநகர் பாங்காங் நோக்கி திருப்பி விடப்பட்டது.

அங்கேயே குறித்த பெண்மணியை வெளியேற்றியதாகவும், ஆனால் குழந்தை எதையும் அப்போது கண்டெடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்தோனேசியாவில் விமானத்தின் கழிவறையில் இருந்து பிஞ்சு குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து விமான நிலைய அதிகாரிகளின் தாய்லாந்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஹான் என மட்டுமே அறியப்பட்ட குறித்த 37 வயது பெண்மணியை கைது செய்துள்ளனர்.

மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கும் குறித்த பெண்மணி தற்போது பாங்காங் விமான நிலைய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்