40 ஆண்டுகளுக்கு பின்னர் சஹாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

உகலின் மிகவும் வெப்பம் மிகுந்த சஹாரா பாலைவனத்தில் நீண்ட 40 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

சுமார் 18 அங்குலம் அளவுக்கு அங்கு பனிப்படலம் மூடியிருப்பதாக புகைப்படக்கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

வட ஆப்பிரிக்காவின் Ain Sefra என்ற நகரத்திலேயே இந்த அரிய காட்சி காணக்கிடைத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 37 ஆண்டுகளாக குறித்த நகரமானது பனிப்பொழிவை கண்டதில்லை எனக் கூறும் அப்பகுதி மக்கள் மிக குதூகலமாக பனிப்பொழிவை கொண்டாடியுள்ளனர்.

ஞாயிறு அதிகாலையில் பனிப்பொழிவு துவங்கியதாக கூறும் மக்கள், அது உடனடியாக மணல் மீது படிந்து உறையவும் துவங்கியதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்கள் முடிந்த சில தினங்களில் கடுமையான பனிப்பொழிவு இருந்ததாக கூறும் சுற்றுலாப்பயணிகள், இதனால் தாங்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளானதாகவும் தெரிவித்துள்ளனர்.

இறுதியாக இப்பகுதியில் கடந்த 1979 ஆம் ஆண்டு இதே பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதாக கூறும் மக்கள், சுமார் அரை மணி நேரம் தொடர்ந்து பனிப்பொழிவு நீடித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

Ain Sefra பகுதியானது கடல்மட்டத்தில் இருந்து சுமார் 1000 மீற்றர்கள் உயரத்தில் உள்ளது. சஹாரா பாலைவனமானது வட ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியை சூழ்ந்துள்ளது.

தற்போது மிக வரண்ட பகுதியாக காணப்படும் சஹாரா பாலைவனமானது அடுத்த 15,000 ஆண்டுகளில் பச்சைப்பசேல் பகுதியாக மாறும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்