கரணம் தப்பினால் மரணம் என்பது இதுதானா ???

Report Print Gokulan Gokulan in ஏனைய நாடுகள்

பெலாரஸ் கோமேலிலுள்ள அக்ரோபாட்டிக் சாகசத்தின் போது பாதுகாப்பு வளையத்தை தவறிவிட்டதால், பார்வையாளர்களின் முன்னால் சாகசக்கலைஞர் விழுந்துள்ளார்.

நிகழ்ந்தவை என்னவென்றால் சாகசம் செய்யும் பொழுது, பாதுகாப்பு வளையத்தின் விளிம்பை மூடியபின், கீழே தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சாகசக்கலைஞருக்கு, தலையில் தீவிர காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு தொலைபேசி கமெராவின் பதிவிலிருந்து இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் கைப்பற்றப்பட்டது.

இதனைக்கண்ட குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் திகிலடைந்தனர். கடினமான நான்கு மாடிகளுக்கு சமமான (சுமார் 40 அடிஉயரம்) இடத்திலிருந்து தரையிறங்கிய போது விழுந்ததால் தலையில் அடிபட்டு ,பிறகு ஒரு ஸ்ட்ரெச்சரில் மயக்கமான நிலையில் கொண்டு செல்லப்பட்டார்.

அவள் தலையில் பெரிய வீக்கம் இருக்கிறது ஆனால் மருத்துவர்கள் எந்த எலும்புகளும் உடைக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள்.

இதனையடுத்து நகர சர்க்கஸின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், யூலியா இன்னும் மருத்துவ சிகிச்சை பெறுகிறார் ,அவரது எலும்புகலில் முறிவுகள் இல்லை. மேலும் அறுவை சிகிச்சை தேவை இல்லை என்றும், நேரம் செல்ல செல்ல அவள் எப்படி உணருகிறாள் என்று பார்ப்போம் என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

அவளையே நினைத்து வாடும் சக பணியாளர்களுக்கும், அவளுக்காக வருந்திய அனைவருக்கும் நிர்வாகம் சார்பில் நன்றியையும் தெரிவித்தனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்