துபாயில் இந்தியருக்கு அடித்த பம்பர் பரிசு

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

துபாயில் வசித்து வந்த இந்தியருக்கு லாட்டரியில் 2.1 கோடி பம்பர் பரிசு அடித்துள்ளது.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஹரிகிருஷ்ணன் நாயர் என்பது தனது மனைவி மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.

இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றுகிறார்.

அபுதாபியில் பிரபலமான ‘பிக் டிக்கெட்’ லாட்டரி சீட்டை இவர் வாங்கி இருந்தார். இவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ஜாக்பாட் பரிசான 2.1 கோடி திர்ஹம்கள் கிடைத்துள்ளது.

பம்பர் பரிசால் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கும் நாயர், இதனை வைத்து எனது குடும்பத்தை பராமரிக்கவும், உலக சுற்றுலா செல்லவும் ஆசைப்படுகிறேன் என கூறியுள்ளார்.

மேலும், தேவைகளை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடும் ஏழை மக்களுக்கு உதவிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே உண்டு. கடவுள் அருளால் அதை இப்போது என்னால் செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்