உலகையே அச்சுறுத்தும் வடகொரிய ஜனாதிபதிக்கு இப்படி ஒரு நோயா? பகீர் கிளப்பும் தகவல்கள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

அணு ஆயுத சோதனையில் தற்போது உலகநாடுகளை அச்சுறுத்தி வரும் நாடு என்றால் வடகொரியாவை கூறலாம்.

வடகொரியா மீது தொடர்ந்து பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டாலும், அந்நாடு தன்னுடைய அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை கைவிடும்படி இல்லை.

சமீபத்தில் கூட வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தங்கள் நாட்டின் அணு ஆயுத சோதனைகளை தொடரும் என்று கூறினார்.

வடகொரியாவில் இந்த பிடிவாதத்தால் அருகில் இருக்கும் தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன.

இப்படி உலகநாடுகளை அச்சுறுத்து வரும் வடகொரிய ஜனாதிபதிக்கு சிறுநீரக தொடர்பான நோய் இருக்கலாம் என்று தென் கொரியாவின் Chungnam மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவரும் ஆடியோ தடவியல் நிபுணருமான Cho Dong கூறியுள்ளார்.

ஏனெனில் புத்தாண்டு தினத்தின் போது கிம் ஜாங் உன் பேசியதை வைத்து பார்க்கும் போது, அவருக்கு சிறு நீரக தொடர்பான பிரச்சனைகள் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் மற்றபடி நுரையீரல் மற்றும் இதயம் போன்றவைகள் நல்லபடியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கிம் தற்போது அதிக அளவில் எடை போட்டுள்ளார், அதுமட்டுமின்றி சமீபகாலமாக அவருடைய புகைப்படங்களில் அவர் வேர்வையுடன் இருப்பதை பார்க்கலாம், இதுவும் சிறுநீரக பிரச்சனைகளுக்கான அறிகுறிதான் எனவும் கூறப்படுகிறது.

இதையடுத்து கிம்முக்கு குடிப்பழக்கம், புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களும் உள்ளது. அதிக அளவில் மது குடிக்கும் கிம் ஒரு இரவிற்கு 10 பாட்டில் Bordeaux மது குடிப்பவர் என்று கிம் ஜாங் உன்னிற்கு மருத்துவம் அளிக்கும் மருத்துவ குழுவில் இருந்த மருத்துவர் ஏற்கனவே பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு கூறியிருந்தார்.

அதுமட்டுமின்றி வடகொரியாவிற்கு 1 மில்லியன் பவுண்டிற்கு மதுபாட்டில்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்