உலகிலேயே முடியாலான பெண்: தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

தாய்லாந்தை சேர்ந்த 17 வயது பெண்மணியான நாட்டியா பிறப்பிலேயே Ambras Syndrome- ஆல் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதனால், இவரது முகம் முழுவதும் முடிகள் வளர்ந்து மிகவும் இருட்டாக இருக்கும். 2010 ஆம் ஆண்டில் உலகிலேயே முடியாலான பெண் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்.

இளம் வயதிலேயே லேசர் அறுவை சிகிச்சை செய்தும் அது பலனளிக்கவில்லை, மருத்துவர்களாலும் இவரது முகத்தில் வளரும் முடியை கட்டுப்படுத்த இயலவில்லை. தற்போது 17 வயதை எட்டியுள்ள நாட்டியாவுக்கு காதலன் கிடைத்துள்ளார்.

தனது காதல் வாழ்க்கையால் மகிழ்ச்சியாக இருக்கும் நாட்டியா கூறியதாவது, பள்ளிப்பருவத்தில் என்னை சிலர் குரங்கு என்று அழைப்பார்கள், ஆனால் அதற்கு ஒருபோதும் நான் வருந்தியது கிடையாது. ஏனெனில் எனக்கு அதிக நண்பர்களும் இருக்கின்றனர்.

தற்போது எனது நிலையை புரிந்துகொண்ட காதலன் கிடைத்துள்ளார், அவரால் எனது வாழ்வில் மகிழ்ச்சி அதிகரித்துள்ளது.

நாட்டியா தனது முகத்தை கிளின் ஷேவ் செய்து கொண்டு தனது காதலனோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்