அனைவரின் கரகோஷத்தை தனதாக்கிய நடிகையின் பேச்சு

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

ஆஸ்கருக்கு அடுத்தபடியாக உலகின் பெருமைக்குரிய விருது விழாவாக கருதப்படுவது கோல்டன் குளோப் விருது ஆகும்.

75வது கோல்டன் குளோப் விருது விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்றிரவு நடைபெற்றது.

சிறந்த திரைப்படத்திற்கான விருதை ’Three Billboards Outside Ebbing, Missouri' எனும் திரைப்படம் வென்றது, சிறந்த நடிகராக Gary Oldman தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் ‘Cecil B. de Mille' எனும் விருதினை ஆப்பிரிக்க- அமெரிக்க நடிகையும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளருமான ஓப்ரா வின்பிரேவுக்கு வழங்கப்பட்டது.

பின்னர் அவர் ஆற்றிய உரைக்கு, அரங்கத்தில் திரண்டிருந்த அனைவரும் கரவொலியை எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

விருதினைப் பெற்ற ஓப்ரா கூறுகையில், ‘பல ஆண்டுகளுக்கு முன்னர், முதன்முதலாக ஆஸ்கர் விருதை ஒரு கருப்பின நடிகர் பெற்றபோது, பாத்திரம் கழுவும் ஏழை ஆப்பிரிக்க பெண்ணுக்குப் பிறந்த நான் பரவசப்பட்டேன்.

வாழ்வின் பல படிநிலைகளை கடந்து, கஷ்டப்பட்டு முன்னேறியபோது ஆணாதிக்க சமுதாயத்தால் பெண்களுக்கு நேரும் கொடுமைகளை அறிய நேர்ந்தது.

ஆனால், இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் எழுப்ப, முன்னர் பாதிக்கப்பட்ட பெண்கள் தயங்கிய நிலை தற்போது மாறியுள்ளது.

தங்களுக்கு நேரும் கொடுமைகளை தோலுரித்துக்காட்ட, நமது பெண்கள் தயாராகி விட்டனர். பூமிக்கும் வானத்துக்கும் இடையில் புதியநாள் உதயமாகிவிட்டது என்பதை, இந்த விருது விழாவை பார்த்துக் கொண்டிருக்கும் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்