நோயாளிகளையும் விட்டுவைக்காத ஹேக்கர்கள்

Report Print Givitharan Givitharan in ஏனைய நாடுகள்

ஒன்லைன் ஊடாக தனிப்பட்ட நபர்களின் தகவல்கள் பரிமாறப்படுதல் மற்றும் சேமித்தல் என்பவற்றினை சாதகமாகப் பயன்படுத்தி அவர்களது தகவல்களை ஹேக்கர்கள் திருடி வருகின்றனர்.

இதேபோன்று புளோரிடாவில் சுமார் 30,000 நோயாளிகளின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச் சம்பவம் கடந்த இரு மாதங்களுக்கு இடம்பெற்றுள்ளதாக அம் மாநிலத்தின் Agency for Health Care Administration தெரிவித்துள்ளது.

இதன்போது தனி நபர்களின் மருத்துவ இலக்கம், பிறந்த தினம், முகவரி, நோய் அறிகுறி, நோயாளிகளின் நிலைமை மற்றும் சமூக பாதுகாப்பு எண்கள் போன்றன திருடப்பட்டுள்ளன.

இத் தகவல்கள் தவறான முறைகளில் பயன்படுத்தப்பட்டால் 844-749-8327 என்ற இலக்கத்திற்கு அறியத்தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்காலத்தில் முறையான பாதுகாப்பினை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொள்ளும்பொருட்டு பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்