இப்படி ஒரு கலாச்சாரமா? சிறுவர், சிறுமிகளை புகைப்பிடிக்க ஊக்குவிக்கும் பெற்றோர்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

போர்ச்சுகலில் உள்ள கிராமத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது சிறுவர், சிறுமிகளை அவர்கள் பெற்றோர் புகைப்பிடிக்க சொல்லி ஊக்குவிக்கும் கலாச்சாரம் இன்றும் தொடர்கிறது.

நாட்டின் Vale de Salgueiro கிராமத்தில் தான் பல நூறு ஆண்டுகளாக இந்த விடயம் பின்பற்றப்பட்டு வருகிறது, கிறிஸ்துமஸ் பண்டிகை முடிய போகிறது என்பதை உணர்த்தவே இவ்வாறு செய்யப்படுகிறது.

போர்ச்சுகலில் 18 வயதானவர்களுக்கு மட்டும் தான் சிகரெட் போன்ற போதை பொருட்களை விற்பனை செய்ய முடியும்.

ஆனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிகரெட் கொடுப்பதை தடுக்க எந்தவொரு சட்டமும் அங்கு இல்லை.

பண்டிகை சமயத்தில் இளம் சிறார்கள் சிகரெட்டை வைத்து புகைப்பதை கிராமத்தில் அதிகம் காணமுடிகிறது.

நாட்டின் அதிகாரிகள் இதை தடுப்பதில்லை, குயில்ஹெரிமா (35) என்ற நபர் கூறுகையில், என் மகளுக்கு சிகரெட் கொடுப்பதை தான் கெடுதலாக கருதவில்லை.

காரணம் சிறுமியான அவள் புகையை உள்ளிழுக்காமல் அப்படியே விட்டு விடுவாள் என கூறியுள்ளார்.

இந்த இரண்டு நாட்கள் கொண்டாட்டத்தில் தீமூட்டி அதை சுற்றி மக்கள் இசைக்கு ஏற்றவாறு நடனம் ஆடுவதோடு சிற்றுண்டி மற்றும் மதுவையும் அருந்துகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்