எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்: உயிருக்கு உயிரான காதலர்கள் எடுத்த அதிர்ச்சி முடிவு

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

இந்தியாவில் உயிருக்கு உயிராக காதலித்து வந்த காதலர்கள் தங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவின் Hazratganj பகுதியை சேர்ந்த திவாரி(19), காஜல் (18) ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலர்களாக மாறியுள்ளனர்.

திவாரி அனிமேஷன் கல்லூரியில் பயின்று வந்துள்ளார், காஜல் இளங்கலை அறிவியல் பயின்று வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் பொது இடத்தில் வைத்து பேசிக்கொண்டது பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து, இரு வீட்டார் தரப்பும் இருவரையும் எச்சரித்துள்ளனர்.

இருப்பினும் காதலர்கள் தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர், இதனை அறிந்த பெற்றோர் மீண்டும் இருவரையும் அழைத்து, இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் இனிமேல் நீங்கள் பேசிக்கொள்ளக்கூடாது என எச்சரித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த காதலர்கள், தாங்கள் வழமையாக ஜிம்முக்கு செல்லும் பயிற்சி மையத்திற்கு சென்றுவிட்டு, அந்த கட்டிடத்தின் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.

காதலர்களின் உடல் மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இவர்கள் இருவரின் மரணத்தால் மனம் உடைந்த பெற்றோர், எங்கள் பிள்ளைகள் இப்படி ஒரு முடிவை எடுப்பார்கள் என நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை, எங்கள் பிள்ளைகள் மூளைச்சலவை செய்யப்பட்டு இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார்கள் என தெரிவித்துள்ளனர்.

தற்போது இதுகுறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்