இரண்டு காதலிகளோடும் ஒரே வீட்டில் வசித்து வரும் கல்லூரி மாணவன்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

பிரித்தானியாவை சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவன் தனது இரண்டு காதலிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Leeds University - யில் பயின்று வரும் Joseph Freeney (22) என்ற மாணவர், Katie Aitchison(21) என்ற பெண்ணுடன் டேட்டிங் செய்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அதே பல்கலைகழகத்தின் பயின்று வரும் Clare Verduyn என்று மீது Joseph காதல் வயப்பட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, தனது இரண்டு காதலிகளோடும் Joseph ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இதுகுறித்து Joseph கூறியதாவது, நான் Polyamory உறவுமுறையை விரும்புவன், தற்போது நாங்கள் மூன்று பேரும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம்.

காலையில் எழுந்து மூன்று பேரும் சேர்ந்த சமையல் செய்துவிட்டு, அனைத்து வீட்டு வேலைகளையும் முடித்து விட்டு கல்லூரிக்கு செல்வோம். எங்கள் மூன்று பேருக்கும் எவ்வித பிரச்சனையும் இல்லை.

எனது நண்பன் கூட, உலகிலேயே மகிழ்ச்சியாக வாழும் ஆண் நீ தான் என என்னை கிண்டல் செய்வான் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்