கொரிய நாடுகள் பேச்சுவார்த்தை: வெளியான பகீர் பின்னணி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வடகொரியாவின் அபரிமிதமான அணு ஆயுதச் சோதனைகளால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.

இதனால், இரு நாடுகளுக்கும் போர் வெடிக்கக்கூடும் என்ற அச்சமும் உலக நாடுகள் மத்தியில் இருந்து வந்தது. இந்நிலையில்தான், இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதை ரஷ்யா வரவேற்றுள்ளது.

வரும் பிப்ரவரி மாதம், தென்கொரியாவில் இருக்கும் பியோங்சங்கில் வின்டர் ஒலிம்பிக்ஸ் நடக்க உள்ள நிலையில், வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தென்கொரியா விருப்பம் தெரிவித்திருந்தது.

வடகொரியாவில்தான் இந்தப் பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடக்க உள்ளது. வின்டர் ஒலிம்பிக்ஸில் வடகொரியா கலந்துகொள்ளுமா இல்லையா என்பதுதான் இந்தப் பேச்சுவார்த்தையின் சாரமாக இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.

தென்கொரியா, அமைதி நோக்கி முதல் முயற்சி மேற்கொண்ட நிலையில், வடகொரியா மற்றொரு முயற்சியை எடுத்துவைத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ரஷ்யா, `தென் கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் இந்த வாரம் பேச்சுவார்த்தை நடக்கப்போவது வரவேற்கத்தக்கது.

இரு நாட்டினரும் நேரடியாக இதைப் போன்ற சுமுக பேச்சுவார்த்தையில் இறங்குவது, கொரிய தீபகற்பத்தில் வெகு நாட்களாக நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்க உதவும்' என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

ஆனால் குறித்த பேச்சுவார்த்தையின் போர்வையில் வடகொரியா தமது திட்டங்களை தென் கொரியாவில் செயபடுத்த முயற்சி மேற்கொள்ளும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பும், வடகொரிய தலைவருடன் தொலைபேசியில் தாம் பேச தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்