மெக்சிகோ கடற்கரையில் துப்பாக்கி சூடு: 11 பேர் பலி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

மெக்சிகோவில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் அப்பாவி மக்கள் 8 பேர் உள்ளிட்ட 11 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவின் Acapulco பகுதியில் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இப்பகுதியில் ஒழுங்கற்ற நடத்தை காரணமாக நபர் ஒருவரை கைது செய்த பொலிசாருக்கு எதிராக கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் எதிர் தாக்குதல் நடத்திய பொலிசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு அப்பாவி பொதுமக்கள் 8 பேர் உள்ளிட்ட 11 பேர் பலியாகியுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதியில் ராணுவம் மற்றும் மாநில பொலிசார் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதலில் 3 பொலிசாரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Acapulco நகரமானது உலகின் மிக ஆபத்தான பகுதிகளில் ஒன்றாகும். இங்கு கடந்த 2017 ஆம் ஆண்டின் முதல் 6 மாதத்தில் மட்டும் 12,000 படுகொலை சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்