கடலில் சரக்கு கப்பலுடன் மோதி கொளுந்து விட்டு எரியும் எண்ணெய் கப்பல்: 32 பேரை காணவில்லை

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

சீனா கிழக்கு கடற்பரப்பில் சரக்கு கப்பலுடன் எண்ணெய் கப்பல் மோதி விபத்துக்கு உள்ளானதில் 32 பேரை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

60 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள 136,000 டன் எண்ணெயை ஈரான் நாட்டு கப்பல் சுமந்து வந்துள்ளது.

காணாமல் போன 32 பேரும் எண்ணெய் கப்பலில் பணிப்புரிபவர்கள் என்று சீன போக்குவரத்து அமைச்சகம் கூறி உள்ளது.

32 பேரில் 30 பேர் ஈரானியர்கள், 2 பேர் வங்க தேசத்தை சேர்ந்தவர்கள்.

சரக்கு கப்பலில் இருந்த 21 பேரும் மீட்கப்பட்டு விட்டார்கள் என்றும் விபத்துக்குள்ளான அந்த கப்பல் இன்னும் எரிந்துக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கடற்பரப்பில் எண்ணெய் படர்ந்துள்ளது. மீட்பு பணியை துரிதப்படுத்தி உள்ளோம் என்று கூறியுள்ளது.

எட்டுக் கப்பல்களை மீட்பு பணியில் ஈடுப்படுத்தி உள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவும் கடலோர காவல் கப்பல் ஒன்றையும், ஹெலிகாப்டர் ஒன்றையும் மீட்பு பணியில் ஈடுப்படுத்தி உள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers