10 கோடி ரூபாயை ஏமாற்ற நினைத்த மகன்கள்: பாடம் புகட்டிய தாய்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தைவானில் தாய் தொடரப்பட்ட வழக்கில் மகன்கள் 6 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தைவானைச் சேர்ந்த லுவே, கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று, தனது இரண்டு மகன்களையும் வளர்த்து வந்தார். அவர்களை பல் மருத்துவர்களுக்கு படிக்க வைத்தார்.

அதன் பின் அவர் மகன்கள் எங்கு தம்மை முதுமையில் கை விட்டுவிடுவார்களோ என்று பயந்து, அவர்களிடம் பிற்காலத்தில் பல் மருத்துவமனையில் இருந்து கிடைக்கும் லாபத்தில் 60 சதவீதத்தை தனக்கு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை தயார் செய்ததுடன் அவர்களிடம் கையெழுத்தும் வாங்கியுள்ளார்.

அதன் படி மகன்களும் 10 கோடியே 50 லட்சம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் படிப்பு முடிந்து இருவருக்கும் நல்ல லாபத்திற்கு பணம் வந்துள்ளது. இதற்கிடையில் லுவேவுக்கு வயதுமாகியுள்ளது.

அப்போது மகன்கள் தாங்கள் கூறிய படி 10 கோடியே 50 லட்சத்தை லுவேவுக்கு கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி அவரை பராமரிக்கவும் மறுத்துள்ளனர்.

இதனால் லுவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஒப்பந்தப்படி தனக்கு 10 கோடியே 50 லட்சம் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்

நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி லுவேவுக்கு, மகன்கள் 6 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார். சொந்த மகன்கள் மீதே நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த லுவே தைவானில் பரபரப்பாக பேசப்பட்டார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers