விமானத்தில் மலம் கழித்து அசுத்தம் செய்த நபர்: திருப்பிவிடப்பட்ட விமானம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஹாங்காங் நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தின் கழிப்பறை முழுவதும் பயணி மலம் கழித்து அசுத்தம் செய்ததால் விமான அலஸ்கா நகரில் தரையிறக்கப்பட்டது.

சிக்காகோவிலிருந்து ஹாங்காங்குக்கு 245 பயணிகளை ஏற்றி கொண்டு யுனைடட் ஏர்லன்ஸ் நிறுவன விமானம் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது.

அப்போது விமானத்தில் இருந்த இரண்டு கழிப்பறைகளிலும் 22 வயதான பயணி ஒருவர் தனது மலத்தை பரப்பி அசுத்தம் செய்துள்ளார்.

இதை விமான ஊழியர்களிடம் அவரே சென்று சொன்ன நிலையில் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து விமானம் அலஸ்கா நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அசுத்தம் செய்த பயணிக்கு கைவிலங்கு மாட்டப்பட்டு அமலாக்க துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்டார்.

குறித்த பயணியிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அவர் மன நோயாளியாக இருக்கலாம் என்ற சந்தேகப்பட்ட அதிகாரிகள் மருத்துவமனைக்கு பயணியை அனுப்பி வைத்தனர்.

பயணி மீது வழக்குப்பதிவு எதுவும் செய்யப்படவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers