70 வயது முதியவர்- 4 வயது சிறுமிக்கு திருமணம்: தந்தையின் விபரீத முடிவு

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
369Shares
369Shares
ibctamil.com

மனைவி வீட்டார் வரதட்சணை கொடுக்க மறுத்ததால் பணத்துக்காக தனது நான்கு வயது குழந்தையை 70 வயது முதியவருக்கு திருமணம் செய்து வைக்க நினைத்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கென்யாவின் சம்புரு கவுண்டியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது, 40 வயதான நபர் ஒருவர் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.

ஆனால் இதற்கு மனைவி சம்மதிக்காத நிலையில் அவரை வரதட்சணை வாங்கி வர சொல்லி தாய் வீட்டுக்கு கணவன் அனுப்பியுள்ளார்.

ஆனால் மனைவியின் பெற்றோர்களால் வரதட்சணை கொடுக்க முடியவில்லை, இதையடுத்து விபரீதமாக பணம் சம்பாதிக்க குறித்த நபர் முடிவெடுத்தார்.

அதன்படி தனது 4 வயது மகளை 70 வயதான முதியவருக்கு திருமணம் செய்து வைத்து அவரிடம் பணம் வாங்கி கொள்ள முடிவெடுத்துள்ளார்.

இந்த விடயம் சிறுமியின் தாய்க்கு தெரியவர குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து சிறுமிக்கும், முதியவருக்கும் நடக்கவிருந்த திருமணத்தை பெண் அதிகாரி ஜேன் கபிரோ தடுத்து நிறுத்தினார்.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, ஆனால் இன்னும் சிறுமியின் தந்தையும், முதியவரும் கைது செய்யப்படவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்