இறந்து அடக்கம் செய்யப்பட்ட நபர் உயிருடன் திரும்பிய அதிசயம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

தாய்லாந்தில் நபர் ஒருவர் இறந்து குடும்பத்தினரால் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், 7 மாதங்களுக்கு பின்னர் அவர் திரும்பி வந்தது குடும்பத்தினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தாய்லாந்தின் Ban Lao Fai பகுதியில் குடியிருந்து வந்தவர் 44 வயதான Sakorn Sacheewa. ஜீரண கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த இவர் திடீரென ஒருநாள் மாயமானார்.

பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திடீரென்று ஒருநாள் Sakorn Sacheewa இறந்துள்ளதாகவும், அவரது உடலை அடையாளம் கண்டு பெற்றுக் கொள்ளுமாறு அதிகாரிகளிடம் இருந்து அவரது குடும்பத்தினருக்கு அழைப்பு வந்துள்ளது.

இதனையடுத்து குறித்த நபரின் உடல் அடையாளம் காணப்பட்டு குடும்ப உறுப்பினர்களின் முன்னிலையில் அவர் எரியூட்டப்பட்டார்.

ஆனால் கடந்த 17 ஆம் திகதி குடும்பத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் வீடு திரும்பியுள்ளார் Sakorn Sacheewa.

ஆனால் உறவினர்கள் இதை நம்ப மறுத்துள்ளதுடன், தமது உறவினரின் ஆவியாக இருக்கலாம் எனவும் அஞ்சியுள்ளனர்.

இதனிடையே தமது நிலையை விளக்கிய Sakorn Sacheewa, மாயமான நாள் முதல் தாம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும், குறித்த காலகட்டத்தில் தமது அடையாள அட்டையை மியான்மர் தொழிலாளர் ஒருவர் திருடிச் சென்று தலைமறைவானதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கவும், மீண்டும் புதிய அடையாள அட்டை பெற்றுக் கொண்டுள்ளார். அடையாள அட்டை தொலைந்ததால் வேலை இழந்த அவர், பின்னர் வீடு திரும்ப முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது அரசு ஆவணங்களில் தாம் இறந்ததாக பதிவாகியுள்ளதால் அதை திருத்தும் பொருட்டு உரிய ஆவணங்களுடன் அதிகாரிகளை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுவரை Sakorn Sacheewa குடும்பத்தினர் யாரை எரியூட்டினர் என்பது மர்மமாகவே உள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்