இந்தோனேசியாவில் கொடிகட்டிப்பறக்கும் நாய்க்கறி வியாபாரம் தொடர்பில் அதிர்ச்சி தரும் ஆதாரங்கள் வெளியாகி பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆதரவற்ற தெருநாய்க்களை பொறிவைத்து பிடித்து சுத்தியலால் அடித்துக் கொன்று வாடிக்கையாளர்களுக்கு வெறும் 1.65 பவுண்ட்ஸ் கட்டணத்தில் உணவாக அளிக்கின்றனர்.
இந்தோனேசியாவில் திரைமறைவில் நடந்துவரும் இந்த கொடூர வியாபாரம் தொடர்பில் புகைப்படக் கலைஞர் ஒருவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூக ஆர்வலர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெருநாய்க்களை அதன் உடல் எடைக்கு ஏற்றார்போல் 8-ல் இருந்து 14 பவுண்ட்ஸ் கட்டணத்தில் விலைக்கு வாங்குகின்றனர்.
வாங்கப்பட்ட நாய்களை அரிசி மற்றும் காய்கறிகளை மட்டும் உணவாக அளித்து சில நாட்கள் பராமரிக்கின்றனர்.
பின்னர் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப சிறப்பு மசாலா கலந்து உணவாக சமைக்கின்றனர்.
கடந்த 2015 செப்டம்பர் மாதம் இந்த கொடூர வியாபாரம் தொடர்பில் குறித்த புகைப்படக்க்லைஞர் இந்த கொடூர புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
ஆனால் அதன் கொடூரத் தன்மையால் இதுநாள் வரை அவர் வெளியிடாமல் குறித்த புகைப்படங்களை பாதுகாத்து வந்துள்ளார்.
நாய்களை கொடூரமாக கொல்லும் கூடமும், அதன் கறிகளை உணவாக விற்கும் உணவகமும் தற்போதும் செயல்பட்டு வருவதாக கூறும் அவர், தினசரி 6 நாய்களையாவது உணவுக்காக கொல்லப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுத்தியலால் நாய்கள் துடிதுடிக்க கொல்லப்படுவது நெஞ்சை பதறவைக்கும் செயல் எனக் கூறும் அவர், வாடிக்கையாளர்களின் தேவையை பொறுத்தே சமைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Saksang என்ற பெயரில் இந்தோனேசியாவின் குறிப்பிட்ட பகுதிகளில் வெறும் 1.65 பவுண்ட்ஸ் கட்டணத்தில் உணவாக அளிக்கின்றனர்.