கரடியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபர்: அதிரவைக்கும் காரணம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

மியான்மரில் அருகிவரும் இனமான கருப்பு கரடி ஒன்று கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நிகழ்வுக்கு பின்னர் பேசிய அவர் தமக்கு கொலை செய்யும் அனுமதியை அரசாங்கம் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது பகீரை கிளப்பியுள்ளது.

சீனாவில் இருந்து மியான்மருக்கு சுற்றுலா சென்ற நபர் ஒருவரே தமக்கு சுட்டுக் கொல்லும் அனுமதியை அரசு வழங்கியுள்ளதாக தெரிவித்தவர்.

தமது அரசாங்கமே துப்பாக்கியை வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சுட்டுக்கொல்லப்பட்ட கரடியானது அருகிவரும் கருப்பு கரடி இனமாகும்.

கடந்த 27ஆம் திகதி நடந்த இச்சம்பவம் சீனா ஊடகங்களில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூண்டில் அடைபட்டிருந்த கரடியை திட்டிக்கொண்டே குறித்த நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் குடியிருக்கும் நபர் ஒருவரே குறித்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மட்டுமின்றி முறைப்படி நீதிமன்றத்தில் குறித்த வழக்கை எதிர்கொள்ளவும் தாம் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை கடுமையாக தாக்கி வந்ததால் தான் தாம் அந்த கரடியை சுட்டுக் கொன்றதாக தெரிவித்துள்ள அவர், உரிய அனுமதி பெற்றதன் பின்னரே தாம் கரடியை கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் பெருகிவரும் எதிர்ப்பால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என கூறியுள்ள அவர், கரடியை சுட்டுக் கொல்வதை இணையத்தில் வெளியிட்டது தமக்கு யார் என தெரியாது எனவும், இதை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்