தனது பிறந்தநாள் அன்றே இறந்த உலகப் பிரபலங்கள்!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

நாம் பிறக்கும் போதே நமது மரணமும் தீர்மானிக்கப்படுகிறது என்று கூறப்படுவதுண்டு, ஆனால் ஒருவரின் பிறந்த நாளே அவருக்கு இறந்த நாளாக அமைவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

அவ்வாறு இறந்த உலக பிரபலங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர். பாடல் மற்றும் நாடகங்கள் எழுவதில் வல்லவரான இவர், தான் பிறந்த ஏப்ரல் 23ஆம் திகதி அன்றே இறந்துள்ளார். இவரின் இறப்புக்கான காரணம் இன்றுவரை புதிராகவே உள்ளது.

ஜெர்ட்ரூடு ஆஸ்டர் என்பவர் ஓர் ஆங்கில நடிகை ஆவார். கடந்த 1915 - 1942 இடைப்பட்ட காலத்தில் இவர் 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிறந்த நவம்பர் 9ஆம் திகதியிலேயே, கடந்த 1977ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

லியானர்டோ டாவின்சி வாழ்ந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர், உலகப் புகழ்பெற்ற ஓவியர் ரபேல். இவரது ஓவியங்கள் மறுமலர்ச்சி ஏற்படுத்துபவை என்று கூறப்படுகிறது. ரபேல், தனது 37வது வயதில் ஏப்ரல் 6ஆம் திகதி 1520ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

அமெரிக்காவின் சிறந்த ஜாஸ் இசைக்கலைஞராக அறியப்பட்டவர் சிட்னி பெச்செட். இவரது இசைக்கு பலர் அடிமையாகியுள்ளனர். இவர், நுரையீரல் புற்றுநோய் காரணமாக கடந்த 1959ஆம் ஆண்டு மே 14ஆம் திகதி, தனது 62வது வயதில் மரணமடைந்தார்.

ஹாலிவுட்டின் சிறந்த நடிகையாக திகழ்ந்தவர் இங்க்ரிட் பெர்க்மன். இவர், மூன்று முறை அகாடமி விருது வென்றவர். பல கிளாசிக் படங்களில் நடித்துப் புகழ்பெற்ற இவர், தனது 67வது வயதில் 1982ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி உயிரிழந்தார்.

பேஸ்பால் விளையாட்டில் அதிக கேட்சுகளை பிடித்த வீரர், என்ற பெருமை பெற்ற காபி ஹர்ட்நெட், தனது 72வது வயதில் டிசம்பர் 20ஆம் திகதி உயிரிழந்தார்.

அமெரிக்காவில் மதம் சார்ந்த ஓவியங்கள் வரைந்து புகழ்பெற்ற ஓவியர் கிராண்ட் வுட். இவர், கணைய புற்றுநோய் காரணமாக பிப்ரவரி 13ஆம் திகதி மரணமடைந்தார்.

கொலை, கொள்ளை, திருட்டுகளில் ஈடுபட்டு கொடூரமான வில்லன் என்னும் பெயர் பெற்ற நபர் ஜியார்ஜ் கெல்லி. 'Machine Gun’ என்று அழைக்கப்பட்ட இவன், 1954ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் திகதி மரணமடைந்தான்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்