சில்லறை காசுகளை சேர்த்து BMW காரை வாங்கிய இளைஞர்

Report Print Kavitha in ஏனைய நாடுகள்

சீனாவை சேர்ந்த இளைஞன் ஒருவர் சில்லரை காசுகளை சேர்த்து வைத்து ரூ.40 லட்சம் மதிப்பிலான BMW காரை வாங்கிச் சென்றுள்ளார்.

சீனாவின் ஃபூஜியான் மாகாணத்தில் உள்ள கார் ஷோரூம் ஒன்றுக்கு 10 அட்டைப்பெட்டிகளுடன் உள்ளே வந்த நபர், பிஎம்டபுள்யூ கார் வாங்க வேண்டும் கூறியுள்ளார்.

ஷோரூம் ஊழியர்கள் காரை காட்ட, அதிலிருந்து ஒரு காரை தெரிவு செய்துள்ளார்.

உடனே தன்னிடமிருந்து 10 அட்டை பெட்டிகளை காட்டி, அதில் பணம் இருப்பதாகவும், தான் இப்போதே காரை வாங்கிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

பெட்டியை திறந்து பார்த்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, BMW கார் வாங்குவதற்காக சில்லரைகளை சேர்த்து வைத்துள்ளார்.

சீனாவில் சில்லறை காசுகள் 'மேவோ' என்று குறிப்பிடப்படுகிறது. அந்த வாடிக்கையாளர் கொண்டுவந்த பத்து பெட்டிகளிலும் 5 மேவோ காசுகள் மட்டுமே இருந்தன.

ஷோரூம் ஊழியர்களும் அந்த நபரின் பல ஆண்டுகள் சேமிப்பிற்கு மதிப்பளித்து, ஒவ்வொருவராக பத்து பெட்டிகளில் இருந்த சில்லறை காசுகளை எண்ணத்தொடங்கினர்.

ஷோரூம் ஊழியர்கள் எல்லா பெட்டிகளையும் எண்ணிப்பார்த்ததில் இந்திய மதிப்பில் ரூ. 6.84 லட்சம் இருந்தன.

பிஎம்டபுள்யூ காரின் விலை ரூ. 40 லட்சம். ரூ.6.84 லட்சம் சில்லறை காசுகள் முதல் தவணை பணமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

ரூ. 40 லட்சம் மதிப்பிலான அந்த பிஎம்டபுள்யூ காருக்கு மொத்தம் 5 தவணைகளாக பணம் தருவதாக வாடிக்கையாளர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆனால் அந்த வாடிக்கையாளரை குறித்த தகவல்களை கார் ஷோரூம் ஊழியர்கள் வெளியிட மறுத்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்