பிங்க் நிறத்தில் காட்சியளிக்கும் கிராமம்: என்ன காரணம் தெரியுமா?

Report Print Printha in ஏனைய நாடுகள்

சட்டீஸ்கர் மாநிலத்தின் அருகே நானாக்சாகர் எனும் கிராமம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ளவர்கள் தங்கள் வீட்டை பிங்க் நிறத்தில் மாற்றி வைத்துள்ளதால் அந்த கிராமம் முழுவதுமே பிங்க் நிறத்தில் காட்சியளிக்கிறது.

இதற்கு சுத்தம் சோறு போடும் எனும் பழமொழியை கருத்தில் கொண்டு அந்த கிராமத்தினர் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்கின்றோம் என்பதை அந்த கிராம மக்கள் காரணமாக கூறுகின்றனர்.

அதன் அடிப்படையில் இந்த கிராமத்தில் சில விதிகளை முன் வைத்துள்ளனர். அதாவது, இங்குள்ள அனைத்து வீட்டிலும் குறைந்தது ஒரு கழிவறை இருக்க வேண்டும்.

அந்த கழிவறையுடன் வீட்டையும் பிங்க் நிறத்தில் வண்ணம் அடித்து வைத்திருக்க வேண்டும் என்பது இந்த கிராமத்தில் உள்ளூர் விதியாக உள்ளது.

ஒருவேளை வீட்டில் கழிப்பறை இல்லை என்றால், அந்த குடும்பத்திற்கு ரூ.500 அபராதம் கொடுக்க வேண்டுமாம்.

இதுபோன்று இந்த ஊரில் பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி, மரம் வளர்த்தல், நீரை சேமித்தல் போன்றவற்றை செயல்படுத்தி வருகின்றனர்.

இதனால் பிங்க் நிறத்தில் காட்சியளிக்கும் இந்த ஊர் அப்பகுதியில் தனியாக தோற்றமளிக்கிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்