மரண தண்டனையை எதிர்நோக்கும் 123 பேர்: எங்கு தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஜப்பானில் வரும் 31-ம் திகதிக்குள் மரணதண்டனைக்கு காத்திருக்கும் கைதிகளின் எண்ணிக்கை 123 ஆக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக நாட்டின் நீதிதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2007ஆம் ஆண்டுக்கு பிறகு எண்ணிக்கையானது 100ஐ தாண்டுவது இதுவே முதல்முறையாகும்.

பல்வேறு குற்றசெயல்களில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் இந்தாண்டு நான்கு பேர் தூக்கிலிடபட்டனர்.

அதே போல தண்டனை விதிக்கப்பட்ட நான்கு கைதிகள் உடல் நலக்குறைவால் இறந்தார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

ஜப்பானில் மரண தண்டனையானது சர்வதேச விமர்சனத்தை ஈர்த்துள்ள நிலையில் 2020-ஆம் ஆண்டளவில் இது நிராகரிக்கப்பட்டு அதற்கு பதிலாக ஆயுள் தண்டனையை அரசு அறிமுகப்படுத்த வேண்டும் என கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது,

அதே நேரத்தில் கடந்த 2014-ல் ஜப்பான் அரசு எடுத்த சர்வேயில் 80.3 ஜப்பானியர்கள் மரண தண்டனையை ஆதரிப்பதாக தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்