ஆண்களை போட்டி போட்டு வாங்கிய பெண்கள்: 1 மணி நேரத்திற்கு எவ்வளவு தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்
699Shares

சீனாவில் ஆண் நண்பர்கள் இல்லாத பெண்களுக்காக கடை ஒன்று திறக்கப்பட்டதால் அங்கு பெண்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.

சீனாவின் Haikou பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலில் பெண்கள் தங்கள் கிறிஸ்துமஸ் தினத்தை ஆண் நண்பர்களுடன் கொண்டாடுவதற்காக ஷோ ரூம் திறக்கப்பட்டுள்ளது.

அந்த ஷோ ரூம்பில் 6 அழகான ஆண்கள், திருமணம் செய்யாத ஆண்கள் ஒரு பெட்டியின் உள்ளே நின்று கொண்டிருந்தனர். அவர்கள் சரசாரியாக 6 அடி உயரம் இருந்தனர்.

இது குறித்து தகவல்கள் தெரிவிக்கையில், சீனாவின் ஏராளமான பெண்கள் ஆண் நண்பர்கள் இல்லாமல் இருக்கின்றனர்.

இதனால் இந்த வருடம் அவர்கள் கிறிஸ்துமஸ் தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அந்த ஷோ ரூம்மின் உரிமையாளர் 6 அழகான ஆண்களை அங்கிருக்கும் பெட்டி ஒன்றில் நிறுத்தி வைத்துள்ளார்.

அதன் பின் அந்த பெட்டியில் ஒரு QR கோடு ஒன்றை வைத்துள்ளார்.

அதில் உங்களுக்கு இவர் தேவையா, இவருடன் நீங்கள் ஷாப்பிங் செய்ய வேண்டுமா, புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டுமா, இவர் உங்களுக்கு ஒரு அருமையான நண்பர் போன்று இருப்பார், இவர்களில் ஒருவருடன் நீங்கள் ஒரு மணி நேரம் பொழுதை கழிப்பதற்கு 11p சீன மதிப்பு செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை அறிந்த பெண்கள் உடனடியாக அங்கிருக்கும் ஷோ ரூம்மிற்கு சென்றுள்ளனர். ஆனால் அறிவிக்கப்பட்ட 6 நிமிடங்களிலே அந்த 6 ஆண்களும் வாடகைக்கு எடுத்துவிட்டதாகவும், சில பெண்கள் ஏமாற்றத்துடனே சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கிறிஸ்துமஸ் தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காகவே கொண்டு வரப்பட்டது எனவும், இதனால் இந்த சலுகை 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் மட்டுமே என்றும் அதுவும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே என்ற நிபந்தனையும் உள்ளது.

இப்படி தங்கள் ஆண் நண்பர்களுடன் செல்லும் பெண்கள் அவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்க முடியாது எனவும், அவர்கள் உங்களுக்கு ஒரு நண்பர் மட்டுமே எனவும், இந்த ஷாப்பிங் மாலில் மட்டுமே நீங்கள் அவர்களுடன் இருக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதில் இருந்த ஒரு நபரை 20 வயது மதிக்கத்தக்க 4 பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கியதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கிறிஸ்துமஸ் முடிந்துள்ள நிலையில், இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்